முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.49 கோடி செலவில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர் வசதி - பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் கருதி ரூ.49 கோடி செலவில் சுத்தமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இதை சட்ட சபையில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அரசாணை வெளியீடு

அதன்படி ஒரு குடிநீர் சுத்திகரிப்பு கருவியின் விலை ரூ.2 லட்சம். இந்த செலவீனத்தை அந்தஅந்த சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மேற்கொண்டு கலெக்டர்கள் வாயிலாக இந்த பணிகள் செய்து முடிக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து