பா.ஜ.க.வில் சேர பதவியை துறந்த சத்தீஸ்கர் கலெக்டர்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
O P Choudhary1 2018-08-25 0

 ராய்கர், சத்தீஸ்கரில் ராய்கர் மாவட்ட கலெக்டர் தான் வகித்துவந்த பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க. வில் சேரப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பி.சவுத்ரி. இவர் வகித்து வந்த தனது கலெக்டர் பதவியை திடீரென துறந்து விட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையில் இவர் அளித்த ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான மாவோயிஸ்டுகளின் பாதிப்புகள் நிறைந்த தன்டேவாடா மாவட்டத்தில் கல்வியில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார் என்றும், பா.ஜ.க வில் சேர்ந்து, காங்கிரஸ் கோட்டையாக திகழும் ராய்கர் மாவட்டத்தின் கர்சியா தொகுதியிலிருந்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நக்சல்கள் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் இவர் பணியாற்றியபோது ஏற்படுத்திய கல்வி மாற்றங்களுக்காக பொது நிர்வாகப் பிரிவில் பிரதமர் விருது 2011-12 பெற்றுள்ளார். எனினும் இவர் பதவியில் இருந்த போது ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து