கேரளத்துக்கு ம.தி.மு.க. ரூ. 10 லட்சம் நிதியுதவி

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      தமிழகம்
vaiko 2017 9 17

சென்னை : மழை, வெள்ளப் பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கேரளத்தில் வரலாறு காணாத இயற்கைப் பேரிடரால், அந்த மாநில மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் கோரிக்கையை ஏற்று, அந்த மாநிலத்துக்குத் தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ம.தி.மு.க. சார்பில் கேரள அரசுக்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மேலும் தேவையான நிவாரணப் பொருள்களும் சேகரித்து அனுப்பப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து