டீசல் விலை இதுவரை இல்லாத உயர்வு
.jpg?itok=gKlsr7Iz)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு நேற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு 80.94 ரூபாயாகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 73.38 ரூபாயாகவும் உள்ளது. டெல்லியில் டீசல் விலை 69.46 ரூபாயாக விற்கப்பனையானது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத ஒன்றாகும். அதுபோலவே பெட்ரோல் விலை டெல்லியில் 78 ரூபாயாக விற்பனையானது.