சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக ஜெ.ஜெயகாந்தன், பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சென்றடைய வேண்டும் என்பதே எனது முதல் குறிக்கோளாகும். எனது சொந்த ஊர் சென்னை மாவட்டம் ஆவடி ஆகும். நான் வேளாண்மை பட்ட மேற்படிப்பு முடித்து அரசு பணியில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் உதவி அலுவலராக பணியில் பொறுப்பேற்றேன். அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப்-I தேர்ச்சி பெற்று திருநெல்வேலியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினேன். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் பணியாற்றினேன். தற்பொழுது இதற்கு முன்பாக அரசு அச்சகத்துறையில் இயக்குநராக பணிபுரிந்து வந்தேன். இதுபோல் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்ததால் தற்பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் பணியில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் செயலாற்றவும் அரசின் திட்டங்களை எளிதாக செயல்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், விவசாயம் என்பது இந்த மாவட்டத்தின் முதன்மை தொழிலாகும். அதற்கேற்ப நான் படித்த வேளாண் படிப்பு துறையின் வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாக செயல்படுத்துவதுடன் மற்ற துறைகளிலும் போதிய முன் அனுபவம் உள்ளதால் சிறந்த முறையில் செயல்படுவதுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்போடு செயல்பட்டு மாவட்டத்தில் தனிமனிதன் ஒவ்வொருவரின் முழு வளர்ச்சியிலும் எங்களது பணி இருக்கும். அதற்கேற்ப பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தெரிவித்தார்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
- திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ரதம்.