முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகசிய சட்டத்தை மீறியதாக மியான்மரில் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு 7 வருட சிறை

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

யங்கூன்,அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.

மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வநதார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.

பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், 12-ம் தேதி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இதுவரை ஜாமீனில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட  சிறை தண்டனை வழங்கியு ள்ளது. வழக்கினை விசரித்து வந்த மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர் என உறுதி செய்தார். அத்துடன் குற்றவாளிகள் அரசு ரகசிய சட்ட பிரிவை மீறி உள்ளதால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதே நேரம் டிசம்பர் 12-ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து