வீட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்த அ.ம.மு.க. நிர்வாகியின் கணவர் கைது

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
dglgudga  news

தி;ண்டு;க்கல், - திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அ.ம.மு.க. நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ஆர்.எம். காலணி 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல்செய்து நகர் மேற்கு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது? இதனை எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்தனர்? இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிளது.
சரவணனை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணன் திண்டுக்கல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளர் மோகனாவின் கணவர் ஆவார். அக்கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சரவணன் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து