திண்டுக்கல்லில் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
7 dgl news

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
பள்ளி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் எஸ்.எம்.பி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட தலைவர் ஐ.பி.செந்தில்குமார் போட்டியை தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். கல்லூரி தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர்கள் ஆர்.ராஜசேகரன், எம்.முகம்மது யூனுஸ் சலீம், என்.செந்தில்குமரன், ஜெ.ஜெயசிம்ஹா, பரமேஸ்வரன், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் கே.எஸ்.கோபிநாத், ஆலோசகர் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எஸ்.எம்.பி. பொறியியல் கல்லூரியில் நடந்த போட்டியில் ஸ்ரீஜெயராஜ் வித்யா மந்திர் பள்ளி 14.1 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. பிரசித்தி வித்யோதயா பள்ளி அணி 6.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் எஸ்.எம்.பி.எம். பள்ளி 20 ஓவரில் 99 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 18 ஓவர்களில் 86 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
பண்ணை சி.பி.எஸ்.இ. பள்ளி 25 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. எஸ்.எஸ்.எம். பள்ளி அணி 16.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பி.எஸ்.என்.ஏ.பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய எஸ்.எஸ்.எம். மெட்ரிக் பள்ளி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
பண்ணை மெட்ரிக் பள்ளி 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை செயலாளர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து