எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதமாக குறைந்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்துகொள்ளும் முறை அமலுக்கு வந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்துநடத்தின.
இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதம் குறைப்பதாகவும், இது மாநில மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான நிவாரணம் இருக்கும் என்று ராவட்சர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்தார்.
இதையடுத்து பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அரசின் இந்த அறிவிப்பால் அரசிற்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


