90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      வர்த்தகம்
barrel oil imported 06-10-2018

புது டெல்லி,ஈரான் நாட்டிலிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நவம்பர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் இந்தியா, நவம்பர் மாதத்தில் ஈரானிடமிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண் ணெயை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்துள்ளது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 60 லட்சம் பேரல்களும், மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் 30 லட்சம் பேரல்களும் வாங்குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து