முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. ஜப்பானுடன் இந்தியா மோதியது. இதில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது.
ஆட்ட நேர முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மன்தீப்சிங், ஹர்மன்பிரீத் சிங், லலித் உபத்யாவ் தலா 2 கோலும், குருஜந்த் சிங், கோஜத்சிங், அக்‌ஷய் தீப் தலா 1 கோல் அடித்தனர். அடுத்து இந்திய அணி நடப்பு சாம்பியனான மலேசியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து