முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைவாழ் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி,-   போடி அருகே மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.
     போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிரைக்காடு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போடி ஏலக்காய் நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி சங்க தலைவர் குறிஞ்சி மணி  தலைமையில் நடைபெற்றது. கிராம தலைவர் தனலட்சுமி, முன்னாள் தலைவர் ராஜூ, பொருளாளர் ராஜேந்திரபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
      நிகழ்ச்சியில் 40 குடும்பத்தினருக்கு இலவச வேட்டி சேலை, குளிர்கால  ஆடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. போடி சிருஷ்டி யோகா பயிற்சி மைய ஆசிரியர் மேகலா, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கேயார் குமரேசன்,செல்லமுத்து,ரவிச்சந்தர்,சங்கர், மகேஸ்வரி,செந்தில்குமார்,ராஜாராம் பூபதி,மகாராஜன்,கார்த்திக்கேயன்,ஆடிட்டர் குமரேசன்,முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். கிராம கமிட்டி உறுப்பினர் அசோக் நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து