முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் தாக்கிய டெல்டா மாவட்டத்தில் சேவை செய்யும் பெல்ஜியம் நாட்டுக்காரர்

சனிக்கிழமை, 24 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

தஞ்சை,பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வான் கீட். இவர் மலை ஏற்றப் பயிற்சியில் ரொம்ப ஈடுபாடு உடையவர். அதனால் சென்னை டிரெக்கிங் கிளப் என்ற ஒரு அமைப்பை இதற்கெனவே தனியாக ஆரம்பித்து நடத்தி வருகிறார்.ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவருகிட்ட உறுப்பினராக உள்ளனர். எங்கே இயற்கை சீற்றம் வந்தாலும் முகத்துக்கு எந்த முகமூடியும் போட்டுக்காம, கொஞ்சமும் முகம் சுளிக்காம சேவை செய்ய கிளம்பி விடுகிறார் இவர். இப்படி சேவை செய்ய அவரது குழுவையும் கூட்டிட்டு வந்துடுவாரு. சென்னை வெள்ளத்தின்போது இவர் செய்த வேலையை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இந்த பெல்ஜியத்து நாட்டுக்காரர் பீட்டர் தற்போது டெல்டா பகுதிக்கு விரைந்து சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு வருகிறார். சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவதுதான் அவரது முதல் வேலை. அவரது நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பீட்டர், மரம் அறுக்கும் இயந்திரத்தை கையோடு எடுத்து கொண்டு காரில் டெல்டா மாவட்டத்துக்கு கிளம்பி சென்று விட்டாராம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரத்துக்கு வந்த  அவர் பள்ளத்தூரில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி ஒதுக்கும் பணியில் தற்போது இறங்கி விட்டார். இவரது பணி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து