தாய், தந்தையை பராமரித்து வந்த சிறுமி அனிதாவிற்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு கட்டி சாவியை வழங்கினார்

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      தேனி
16 Chinnamanur   news

 தேனி - தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி முத்தம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு அனிதா என்ற ஒரு மகள் மட்டும். இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது ஆடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததால் அதை காப்பாற்ற சென்ற சந்திரசேகரன் கிணற்றுக்குள் விழுந்து முதுகு தண்டுவடம் உடைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடக்க முடியாத நிலையில் உள்ள தந்தையையும், மனநிலை சரியில்லாத தாயையும் சிறுமி அனிதாவே பராமரித்து வந்துள்ளார். இவர்களின் நிலை குறித்து சின்னமனூர் ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். உடனடியாக சிறுமி அனிதாவை அழைத்து விசாரித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அனிதாவின் படிப்பு செலவிற்கு மாதம் ரூபாய் 3000 வீதம் அவருடைய வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். மேலும்  தனது உதவியாளரை அழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார். அதன்படி உதவியாளர் ராஜ அழகனன் அனிதாவின் இல்லத்திற்கே சென்று துணை முதல்வர் சார்பில் ரூபாய் 25000 நிதியுதவி வழங்கினார்.  அதனை தொடர்ந்து  இடிந்த நிலையில் உள்ள வீடு குறித்து தமிழக துணை முதல்வரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு 3லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான புது வீடு கட்டி கொடுத்து அவ்வீட்டின் சாவியை நேற்று அனிதா மற்றும் அவருடைய தாயார் முத்தம்மாளிடம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.  அதனை தொடர்ந்து சிறுமி அனிதா கூறும்போது தாய், தந்தை பராமரித்து வந்த எனக்கு தமிழக துணை முதல்வர் படிப்பு செலவுக்காக மாதம் 3000 வழங்கி வருகிறார். மேலும் தற்போது இடிந்த எங்கள் வீட்டை புதிதாக கட்டி வீட்டின் சாவியை கொடுத்துள்ளார். துணை முதல்வருக்கு ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து