ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      அரசியல்
rahul-gandhi 2019 01 11

கொல்கத்தா, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதனடிப்படையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்துள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து