குறைந்த அளவு தண்ணீரில் அதிக பயன்பெற தொழில் நுட்பக் கருவிகளை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் அமைச்சர் ஜி.பாஸ்கரன்; வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      சிவகங்கை
23 baskaran news

சிவகங்கை-  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் பயிர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை குறித்த கண்காட்சி அரங்கை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்து கருத்தரங்கம் நிகழ்ச்சியில் பேசுகையில்,
      இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேளாண்மைத்துறையில் பசுமைப்புரட்சியை உருவாக்க பாடுபட்ட தலைவராவார். அதுமட்டுமன்றி விவசாயிகளின் பிரதானத் தொழில் விவசாயம் அதை சிறப்புடன் செய்ய அவர்களுக்கு என்ன உதவி செய்திட வேண்டும் என்பதை சிந்தித்து திட்டங்களை வழங்கி வந்த தலைவராவார். மேலும் காவிரியாற்றிலிருந்து உரிய தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர போராடி வெற்றி பெற்ற தலைவரும் ஆவார். அவர் காட்டிய வழியில்தான் பல்வேறு திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கோதாவரி ஆற்றை காவிரியாற்றுடன் இணைத்திட ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள திட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். காரணம் சில காலக்கட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுபோன்ற நிலையை ஆறுகளை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.
         இதைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு திட்டங்களை வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்த உத்தரவிட்டு தற்பொழுது விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக அனைத்துப் பகுதிகளிலும் வேளாண்மைத்துறையின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை விவசாயிகள் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் மழைக்காலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதுடன் அதன்மூலம் அருகாமையிலுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நீர்நிலை மட்டம் உயர வாய்ப்பு உருவாகும். எனவே பண்ணைக்குட்டை என்பது விவசாயிகளுக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். அதேபோல் தற்பொழுது குறைந்த அளவில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயப் பணிகளை 
திட்டமிட்டு மேற்கொண்டால்தான் நாம் நினைத்த பயிர் வகைகளை முழுமையாக பயிரிட்டு பயன்பெற முடியும். அதற்கு தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நாம் என்ன விவசாயம் செய்கின்றோமோ அதற்கேற்ப வேளாண் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போது குறைந்த அளவு தண்ணீரில் அதிக அளவு மகசூல் கிடைக்கும் வகையிலும், மேலும் தேவையான பரப்பளவில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் மிகப்பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் உங்களுக்கு தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வேளாண்மைத்துறையில் மானியத் திட்டத்தில் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அதை மனதில் கொண்டு ஒவ்வொரு விவசாயியும் மனம் தளராமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு திட்டமிட்டபடி மகசூலை பெற்று பயன்பெற வேண்டும். அதற்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
          பின்னர் 9 பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தில் ரூ.12.55 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களை வழங்கி வேளாண்மை கண்காட்சியில் சிறப்பாக அரங்கு அமைத்து பொதுமக்களுக்கு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த கல்லல், எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்களுக்கு கேடயம் வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
          இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்இராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சசிகலா, அட்மா திட்ட துணை இயக்குநர்இளங்கோவன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஷர்மிளா, பன்னீர்செல்வம், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து