முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கு விசாரணை 29-ம் தேதி முதல் தொடக்கம்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் அமர்வில் நேற்று இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் 29-ம் தேதி முதல் விசாரணை தொடங்கவுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் ஐகோர்ட் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணை கடந்த 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட இந்த புதிய அமர்வு வரும் 29-ம் தேதியில் இருந்து அயோத்தி வழக்கை விசாரிக்க தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து