சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் ‘ஐக்யூ’ கல்விக்கான காணொலி செயலி துவக்க விழா

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      சிவகங்கை
7 sivagangai news

 சிவகங்கை,- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் பன்னாட்டு அறிஞர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக இன்டெல்லோ ஃபெஸ்ட் 2019 என்ற மாணவ விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக காதி மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத், மாலத்தீவுகள் தரநிர்ணய துறையின் கல்வி அலுவலர் மரியம்நாசீர், லண்டன் ஐஎம்ஐஎம்எஸ் இயக்குநர் ரோமியோ ப்ராங்க்ளின், பூடான் பள்ளியில் பணியாற்றிய பாபு ராஜகோபால், மற்றும் நகர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச ஐஏஎஸ் ஃ ஐபிஎஸ் பயிற்சியகத்தினை துவக்கி வைத்து பேசிய மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் அப்துல்லா ரஸீத் அஹ்மத் கூறியதாவது : இந்தியாவும் மாலத்தீவும் சகோதர நாடுகள். எனது சகோதர சகோதரியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இப்பள்ளி மாணவர்களின் கண்காட்சியும் கலைநிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக இருந்தன. இந்தியாவுடனான கல்வி ஒப்பந்தங்கள் வாயிலாக இருநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கல்வி அனுபவங்களையும் தொழில் வாய்ப்புகளையும் பெற முடியும். என்றார்.
விழாவில் மாணவர்களுக்கான இலவச மொபைல் செயலியை துவக்கி வைத்துப் பேசிய கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது :
கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிட பல்வேறு விதமான முன்னேற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பாக விவசாயிகளின் நலன்பெருக்கும் விதமாக மொபைல் செயலி ஒன்றை நமது முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார். இன்று சிவகங்கை மௌண்ட் லிட்ரா பள்ளியில் கல்விக்கான ஐக்யூ செயலியை துவங்கி வைப்பதில் பெருமைப்படுகின்றேன். மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே. கல்வியில் சிறந்து விளங்கினால் அனைத்து வளங்களும் தானே தேடி வரும். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். தமிழகத்தை எப்போதும் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிட தொடர்ந்து தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது” என்றார்.
விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளித்தலைவர் திரு.பால.கார்த்திகேயன் அமைச்சர் பாஸ்கரன் அவர்களுக்கு “சமூக மேம்பாட்டிற்கான வாழ்நாள் சாதனையாளர்” விருதும், மாலத்தீவுகள் மாநில கல்வி அமைச்சர் திரு.அப்துல்லா ரஸீத் அஹ்மத் அவர்களுக்கு “வாழ்நாள் கல்வியாளர்” விருதும் வழங்கி கௌரவித்தார். பள்ளி முதல்வர் முருகேஸ்பாபு, வரவேற்புரை நல்கினார்.
விழாவில் நகர்ப்பிரமுகர்கள் உதயசூரியன், ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் பாண்டி, ஸ்ரீமீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், தெட்சணாமூர்த்தி, விஜயன், ராமதாஸ், செந்தில்குமார், சிவக்குமார், கிருபாகரன், சுரேஷ்கண்ணன், கணபதி, அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாக்ஷி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை இணைச்செயலாளர் கலைக்குமார், மேலாளர் அரசாங்கம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து