வருசநாடு வனப்பகுதியில் விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானை : கிராம மக்கள் பீதி

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தேனி
12 elephant news

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுற்றிலும் மலைசூழ்ந்த இந்த கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
இந்த கிராமத்தை சேர்ந்த மாயி (58) என்ற விவசாயி நேற்று இரவில் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த அவரைச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று, மாயியை விரட்டி விரட்டி தாக்கியது. தப்பி ஓட முயன்ற மாயியை துதிக்கையால் மடக்கிபிடித்து தனதுகாலால் ஏறிமிதித்தது. இதில் உடல் நசுங்கிய மாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வருசநாடு வனச்சரக அதிகாரிகள் மற்றும் மயிலாடும்பாறை காவல் துறையினர் விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்டு யானை தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து