சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Sabarimala 2018 04 10

திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் போலீசாரின் அறிவுரையை ஏற்று திரும்பிச் சென்றனர்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கேரள அரசு சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து