இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பள்ளி விழாவில் கே.ஏ செங்கோட்டையன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      தேனி
17 senkottaiyan news

தேனி - தேனி மாவட்டம் தேனியில் தனியார் பள்ளியில்  நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கல்வியோடு சேர்ந்து ஒழுக்கம் தேவை. இப்பள்ளியில் அடக்கமும், ஒமுக்கமும் இங்கு இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜிஆர்  சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
மாணவ மாணவிகளுக்கு கல்வியே பொக்கிஷம் என்று மடிக்கணினி உள்ளிட்ட .கல்வி உபகரணங்கள் 14 பொருட்கள் வழங்கி கல்வித் தாயாக விளங்கினார். அவருடைய வழியில் தற்போது தமிழக முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில்  கல்விக்காக 28 ஆயிரம் கோடி ஒதுக்கிய மாநிலம் தமிழகம் மட்டுமே. ஏழையாக பிறப்பது தவறில்லை. இறக்கும்போது ஏழையாக இருக்கக் கூடாது. நம்மை உயர்த்துவது கல்வி தான். எதிர்கால இந்தியாவின் சிற்பிகளாக நீங்கள் மாறுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது . 8, 9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும். நீட் தேர்விற்கு அரசு பள்ளியில் படிக்கும் 4000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கி வருகிறது. தமிழகத்தில் கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி இல்லாவிட்டாலும் மரணம் தான் என்று சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகர் கழக செயலாளர்கள் தேனி கிருஷ்ணகுமார், சின்னமனூர் ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, போடி சற்குணம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து