ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆர்.டீ.ஒ. அலுவலகம் கட்டும் பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2019      விருதுநகர்
3 apk news

 ருப்புக்கோட்டை -       அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே மோட்டார் வாகன ஆய்வாளர் புதிய அலுவலகம் கட்டும் பணி தொடங்குவதற்க்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புதிய அலுவலகத்திற்க்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   ஆவின் பால் விற்பனை உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பால் உற்பத்தி விலையை உயர்த்தி தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார். பால் உற்பத்தியில் வெண்மைபுரட்சியை ஏற்ப்படுத்துவதற்க்காக தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கி வந்தார். அதனால் பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. தற்போது 50 லட்சம் லிட்டர் இலக்கை எளிதாக எட்டியுள்ளோம். பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலிற்க்ககு லிட்டருக்கு ரூ.28ம், எருமைபாலுக்கு ரூ.35ம் வழங்கி வருகிறோம். பால் உற்பத்தியாளர்களுக்கு தனியார் நிறுவனம்  வழங்கும் விலையை விட ஆவின் நிறுவனம் உயர்த்தியே வழங்கி வருகிறது. ஏழை மக்களுக்கு தமிழக  அரசு தரும் ரூ. 2 ஆயிரம் பணம் வழங்கும் திட்டத்தையும்,  மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வழங்கும் திட்டத்தையும்  சிலர் ஏளனம் செய்கின்றனர். காரணம் பிரதமரும், தமிழக முதல்வரும்   விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் ஏழ்மை அறிந்து  இத்திட்டத்தை அறிவித்துள்ளனர். கொடுக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கும், முதல்வருக்கும் உள்ளது.  மத்தியஅரசு விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அறிவித்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் அவர் அவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது ஏழைகளுக்கானதிட்டமே. வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு கட்டுபடும் ஆட்சியே மத்தியில் அமையும்.  இதில் அ.தி.மு.க. அமைச்சர்களும் பங்கேற்கும் நிலை உருவாகும். தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு ஆட்சி அமைக்க நினைக்கின்றனர். அ.தி.மு.க.தொண்டர்களும்,  தமிழக மக்கள் எங்கள் பங்கம் இருக்கின்றனர். வலுவான கூட்டணி அமைத்துவிட்டோம் என்கிற வயிற்றெரிச்சலில் எதிர்கட்சியினர்  அரசு மீது குற்றசாட்டை கூறி வருகின்றனர். தற்போது அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், நகர செயலாளர் கண்ணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்;டியன், பஸ் உரிமையாளர்கள் மகாலிங்கம், சதீஸ், ஜெயவிலாஸ் மேலாளர் நவநீதன், டிரைவிங் ஸ்கூல் நிர்வாகிகள், போக்குவரத்து அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து