கேதார்நாத் கோயில் நிர்வாக குழு உறுப்பினராக அம்பானி மகன் உத்தரகாண்ட் முதல்வர் நியமனம்

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      ஆன்மிகம்
Ambani son 2019 03 08

டேராடூன், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினராக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்தை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நியமித்துள்ளார்.

பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களிலேயே திறக்கப்படுவது வழக்கம். இமயமலையில் மந்தாகினி நதிக்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் சிவனை வழிபாடு நடத்த நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.  அம்பானி குடும்பத்தில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வு நடப்பதற்கு முன்பும் கேதார்நாத் கோயிலில் அவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு நடத்திய பிறகே முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நடந்தது. தற்போது முகேஷ் அம்பானியின் மகன் அனந்தை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில் கமிட்டி உறுப்பினராக உத்தரகாண்ட் முதல்வர் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து