திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித் தேரோட்ட விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
Thiruvarur ther 2019 04 01

திருவாரூர், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில்  பஞ்ச பூதங்களுக்கு உரிய கோவில்களில் பூமிக்குரிய கோவிலாகும். திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்று கூறப்படுவது உண்டு. சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக உள்ள இந்த திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.

தேரை சீராக ஓடச்செய்யும் வகையில் திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டு உள்ளது. தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி உள்ளிட்ட பொம்மைகளுடன் சேர்த்து அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேர் திருவிழாவின் போது மிக பிரம்மாண்டமான ஆழித்தேர் தியாகராஜர் சாமியுடன், கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வலம் வருவது வழக்கம்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற ஆழித்தேரோட்ட விழா நேற்று காலை 7.10 மணிக்கு தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழித்தேருடன், கமலாம்பிகை அம்மன் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடிக்கப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆழித் தேரோட்ட விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவாரூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவாரூர் நகராட்சியின் மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து