முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரேஷ் ரெய்னா, தாஹிர் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சுரேஷ் ரெய்னா, தாஹிரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 29-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ்லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. வாட்சன் 6 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். டு பிளசிஸ் 24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி அரை சதமடித்தார். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து