மீண்டும் பிரதமரானவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்தும்: திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
Modi BJP 2019 03 29

புதுடெல்லி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், அறிவியல் ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட மக்களவை தேர்தல் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து, மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தான் மீண்டும் பிரதமராவது உறுதி என்ற திடமான நம்பிக்கையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியவற்றிற்கு பிரதமர் மோடி திட்டமிட்டு வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை மையப்படுத்தி செயல் திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் அறிவியல் துறை முதன்மை ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து