இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யகூடாது ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவ் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
15 elction

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் -2019 தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம்; 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி வசதி போன்ற சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
வாக்காளர்கள் எண்ணிக்கையினை பொறுத்தவரையில் 7,75,765 ஆண் வாக்காளர்களும், 7,82,063 பெண் வாக்காளர்களும், 82 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15,57,910 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு  விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதேபோல, இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இராணுவ படைவீரர்கள் 1,830 மின்னணு தபால் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 5,310 தபால் வாக்கு சீட்டுகளும், 3,253 நபர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 தேர்தல் வாக்குப்பதிவிற்காக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 4,577 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 2,299 வாக்குப்பதிவு இயந்திரங்களும்;, 2,499 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்களது பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் இதுவரை 5,456 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிவிஜில் செயலி மூலம் இதுவரை 55 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பாக 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழு அலுவலர்கள் மூலமாக இதுவரை ரூ.3,72,01,000- மதிப்பில் பணம் முறையான ஆவணமின்றி பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மூலம் உரிய கால அவகாசத்தில் ஆவணங்கள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் ரூ.3,03,36,000- மதிப்பில் பணம் மீள் வழங்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 188 வாக்குச்சாவடி மையங்கள் கிரிட்டிகல் எனவும், 135 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடிகள்  எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களித்திட ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  குறிப்பாக, 792 வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா முறையில் கண்காணிக்கப்படவுள்ளது.  தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3 கம்பெனி துணை ராணுவ படையினரும், 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு நிறைவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள்ஃவேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.  அதன்படி, 16.04.2019 மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி பிரதிநிதிகள்ஃவேட்பாளர்கள் எவ்விதமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை.  இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து