முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேவாகின் உலகக் கோப்பை அணி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய 7 பேரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார்.

அதாவது விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், டோனி, ஜடேஜா, பி குமார், சமி ஆகியோரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார். இவர்கள் 2015 உலகக்கோப்பையில் விளையாடியவர்கள். புதிதாக கேதர் ஜாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்,ஜாகல் ஆகியோடை தேர்வு செய்துள்ளார். அவருக்கு பதில் அளித்துள்ள பலரும் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அணியில் வேண்டுமென தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

____________

பிராவோவுக்கு தொப்பி அணிய கற்றுக்கொடுக்கும் ஸீவா டோனி

நடப்பு ஐபிஎல் சீசனில், டோனியின் மகள் ஸீவா டோனி அழகிய நடனமாடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் ஐபிஎல் போட்டி நடந்தபோது, கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்தபின் மைதானத்துக்கு வெளியே வீரர் டெயின் பிராவோவுடன் உரையாடிக்கொண்டிருந்த ஸீவா டோனி, தொப்பியை எவ்வாறு அணிய வேண்டுமென அவருக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இந்த அழகிய காட்சியை பதிவுசெய்த டோனி ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து