திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      ஆன்மிகம்
tirupathy 2019 04 25

திருப்பதி : திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளனர்

இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாக கிடைத்து வருகிறது.கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளனர்.பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளன. அதில் ஆபரண தங்கம் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும். காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5,387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளன.பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த 1,381 கிலோ தங்கம் வைப்புக் காலம் முடிந்து சமீபத்தில் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து