எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திறந்து நேற்று எண்ணப்பட்டதில் ரூ.69 லட்சத்திற்கும் மேலாக வருவாயாக கிடைத்திருந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்தும் உண்டியல்கள் திறந்து எண்ணுவது வழக்கம்.அதன் பேரில் நேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகளில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் திருக்கோயிலுக்கு சொந்தமான நம்புகோவில் உள்பட உபகோயில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது.பின்னர் பக்தர்களால் உண்டியலில் காணி்க்கையாக செலுத்தப்பட்ட பணத்தை திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கொண்டுவரப்பட்டது.அங்கு திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணி,சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெகநாதன் ஆகியோர்கள் முன்னிலையில் காணிக்கை பணம் எண்ணப்பட்டது.இதில் ரொக்க பணமாக ரூ.69 லட்சத்து 90 ஆயிரத்து 953 ரூபாயும், தங்கம் 103 கிராமும்,வெள்ளி 2 கிலோ 757 கிராமும் காணிக்கையாக இருந்தது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பரமக்குடி அறநிலையத்துறை ஆய்வாளர் கர்ணன், திருக்கோயில் பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைசெல்வன், கண்ணன், செல்லம், மற்றும் அலுவலர்கள் பழனிமுருகன்,முனியசாமி,சிவபுத்திரன்,ராமநாதன்,சிவவடிவேல்,தபேதார் முத்துக்குமார்,மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


