மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து - காங். சொல்கிறது

புதன்கிழமை, 15 மே 2019      இந்தியா
Mani Shankar Aiyar 2019 05 15

Source: provided

 புதுடெல்லி : மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து. அந்த கருத்தை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறி உள்ளார்.    

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பிரதமர் மோடி விமர்சித்தநிலையில், அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் எழுதிய ஒரு கட்டுரையில், “நாடு கண்ட பிரதமர்களிலேயே மோடிதான் மிகவும் கீழ்த்தரமாக பேசுபவர்” என்று அவர் கூறியுள்ளார். ‘இழிபிறவி’ என்று மோடியை பற்றி ஏற்கனவே கூறியதையும் அவர் நியாயப்படுத்தி உள்ளார்.  

இந்நிலையில், இதுபற்றி கேட்டதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறியதாவது:- மணிசங்கர் அய்யர் கருத்து, அவரே கூறியபடி அவரது சொந்த கருத்து. அந்த கருத்தை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை.

ஆனால், பிரதமர் அலுவலகத்தின் தரத்தை தாழ்த்தியதற்கு மோடிதான் வெட்கப்பட வேண்டும். தான் பயன்படுத்திய வசைமொழிகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து