அமெரிக்காவில் பயங்கரம்: கர்ப்பிணியைக் கொன்றுவிட்டு சிசுவை உயிருடன் எடுத்த கும்பல்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      உலகம்
chicago woman murder 2019 05 17

சிகாகோ, குழந்தை ஆசையால் கர்ப்பிணியைக் கொலை செய்து வயிற்றில் இருந்த குழந்தையை உயிருடன் எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை இல்லை...

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த 19 வயதான ஒசாவோ லோபஸ் என்ற 9மாத கர்ப்பிணி கடந்த மாதம் காணாமல் போனார். இந்நிலையில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் ஒசாவோ லோபஸ் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை காணவில்லை. இதனையடுத்து குழந்தையை லோபஸின் வயிற்றில் இருந்து எடுத்துவிட்டு யாரோ அவரை கொலை செய்துள்ளதாக போலிசார் சந்தேகத்தினர்.

டிஎன்ஏ சோதனை

இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,  இந்த கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். குழந்தையை உயிருடன் எடுத்த டிசைரி, அது தன் குழந்தை என்று உரிமை கொண்டாடியுள்ளார், ஆனால் டிஎன்ஏ சோதனையில் அது ஒசாவோ லோபஸின் குழந்தை என தெரிய வர தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து