காதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி!

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      விளையாட்டு
Hanumant Vihari marriage 2019 05 21

புதுடெல்லி : கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி, தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த இவர், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை செய்தார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.  இவர், தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனமாகோண்டாவைச் சேர்ந்த பிரீத்தி ராஜ் என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்களின் நீண்ட நாள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.  இதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை வாராங்கல்லில் பிரமாண்டமாக நடந்தது. இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து