16-வது மக்களவையை கலைக்க தீர்மானம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறியது

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
pm modi 2019 05 01

புது டெல்லி, 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து