மதுரை மீனாட்சி கோயிலில் முதியவர்களுக்கு சலுகை

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      ஆன்மிகம்
3 Madurai  meenachi

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் சிறப்பு வரிசையில் எளிதில் சாமி தரிசனம் செய்வதாகவும், நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய சிரமப்படும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோரையும் சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க உத்தவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர், சிறு குழந்தைகளை வைத்திருப்போர், கர்ப்பிணி பெண்களை சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்க கோவிலின் இணை ஆணையர், பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து