முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது. ராமேசுவரத்தில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,-  ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள்  அமைக்கும் பணியை அமைச்சர் மணிகண்டன் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.
  ராமேசுவரம் பகுதிக்கு மத்திய அரசு சுற்றுலா திட்டத்தின் கீழ் பல கோடி நிதி வழங்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கரையூர்,சம்பை,கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிகளில் ரூ.7 கோடி மதிப்பில் சேதமடைந்த சாலையை அகற்றி புதிய தார் சாலைகள் அமைக்க  மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் அப்பணிகள் நடைபெற துவக்கவிழா ராமேசுவரம் பகுதியில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தலைமை வகித்து மூன்று பகுதியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். 
 நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது.
 இந்தக் கல்வி ஆண்டிலேயே ஏ.பி.ஜே அப்துல்கலாம் பெயரில் கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.
 ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் தேர்தல் நடைமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. ரூ.5 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த பணிகள் விரைவில் திறக்கப்படும்.மேலும் சுற்றுலா நிதியில் 10 கோடி மதிப்பில் தார் சாலைகள் நடைபெறவுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேசுவரத்தில் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ராமேசுவரம் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கல்லூரியைத் துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கல்வி ஆண்டிலேயே கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.  
 திமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின்  ஆட்சியை கவிழ்க்க முடியாது:
 கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கண்ணை சுண்ணாம்பாகவும், மறு கண்ணை வெண்ணெய்யாகவும் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. மக்களின் மாறுபட்ட மனநிலையால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் பரமக்குடி உள்ளிட்ட  9 தொகுதிகளை வென்றிருக்கிறோம்.அமைச்சர் மணிகண்டனால் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியவில்லை' என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டன் அப்படி ஒரு எம்.எல்.ஏ இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக எம்,எல்,ஏக்கள் ஒரு போதும் விலைக்கு போகமாட்டார்கள் என நம்பிக்கையுடன் உள்ளோம், திமுக தலைவர் ஸ்டாலின், கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின்  ஆட்சியை கவிழ்க்க முடியாது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும்  ராமேஸ்வரம் நகர் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.கே.அர்ச்சுனன், ஆர்.குணசேகரன், மகேந்திரன் மற்றும் பாலமுருகன், பசுமலை, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து