தங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது

புதன்கிழமை, 12 ஜூன் 2019      வர்த்தகம்
gold price rise 2019 06 12

சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 928 ஆக உள்ளது.

சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 608 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தது. 8-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ. 152 உயர்ந்து தங்கம் விலை ரூ.25 ஆயிரத்து 136-க்கு விற்றது. பின்னர் விலை குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.24 ஆயிரத்து 776 ஆக இருந்தது.

நேற்று அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 152 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 928 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது. கிராமுக்கு ரூ. 19 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 3,116-க்கு விற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக தெரிகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 300 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 39 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் ரூ. 39.80 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து