ரேபரேலி சென்றார் சோனியா காந்தி

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
Sonia-Gandhi-arrives-in-Raebareli 2019 06 12

ரேபரேலி : மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி சென்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தான் வெற்றி பெற்ற  மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்றார். அவரது மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ரேபரேலி சென்ற சோனியா காந்தியை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து