அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      தமிழகம்
AMMK s join ADMK 2019 06 16

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலையில் தினகரன் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கழுகுமலை தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையா தலைமையில் 15-வது வார்டுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சால்வை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றார். தொடர்ந்து முத்தையா கூறும் போது, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா கூறியது போல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை அழிக்கமுடியாது. என்பதை நிரூபிக்கும் வகையில் கழுகுமலையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள தினகரன் கட்சியினர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டோம் என்று கூறினார் இந்த இணைப்பு விழாவில் அ.தி.மு.க. கோவில்பட்டி பெரு நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், எம்ஜிஆர் மன்றம் குருநாதன், இளைஞர் பாசறை பழனிகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து