புதிய பாடப் புத்தகங்கள் 2 நாட்களில் வழங்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      தமிழகம்
minister sengottaiyan 2019 05 09

சென்னை, புதிய பாடத்திட்ட புத்தகங்கள் 2 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாற்றம் இல்லை...

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு பாடத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறு பாடத் திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக மொழிப் பாடத்தில் மாற்றமில்லை. தேவைப்பட்டால் தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற நான்கு பாடங்களில் ஆப்ஷன் முறையில் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வரிடம் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரின் கருத்துக்கு பிறகு மக்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும்.

விரைவில் விநியோகம்...

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் எந்த பள்ளியும் மூடப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் தேவையான அளவுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள் முழுமையாக சென்றடையாத பள்ளிகளிகளில் 2 நாட்களில் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை உரிய தீர்வுகளை முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து