முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்

புதன்கிழமை, 19 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் கொ. வீர ராகவ ராவ் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு ஆகியோர் பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். விழாவில் கலெக்டர் பேசியதாவது:- மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்துள்ள மாவட்டங்களில் நமது ராமநாதபுரம் மாவட்டம் ஒன்றாகும். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வேளாண்மை, கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் அனுபவமிக்க தொழிலாளர்களின் திறமையினை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் விதமாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கொத்தனார், மின்சார பணியாளர், பிளம்பர், தச்சர், கம்பி வளைப்பவர், பெயிண்டர், டைல்ஸ் ஒட்டுபவர் போன்ற பல்வேறு முன்னனுபவமிக்க தொழிலாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி வழங்குவதோடு அவர்களின் திறனை மதிப்பீடு செய்து, அங்கீகரித்திடும் விதமாக சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் மட்டும் 740 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டில் மட்டும் 3,300 நபர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு 2,134 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக உள்ள மீன்பிடி தொழில் சார்ந்த உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு செய்தல், பனை மரம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகளும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். விழாவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் கட்டுமானம் தொழில் முன் அனுபவம் மிக்க திறமை வாய்ந்த தொழிலாளர்களின் திறமையினை மதிப்பீடு செய்து சான்றிதழ் அவர் மிதமாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சான்றிதழ் ஆனது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் 2017 2018 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஏறத்தாழ ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
 ராமநாதபுரம் மாவட்டமானது மத்திய அரசின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள வளர்ந்துவரும் மாவட்டங்களில் ஒன்றாகும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். விழாவில் ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரமேஷ் குமார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மு.கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து