எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த ஒப்புதல் அளித்து விட்டு பிறகு தாக்குதல் நடத்தும் முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கப் போவதில்லை என ஈரான் அறிவித்தது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தளவாடங்களை அமெரிக்கா குவித்தது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் எனக் கூறி மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் வான்பரப்பில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்தது. தங்கள் நாட்டு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அதே சமயம் அந்த விமானம் ஈரானின் வான்பரப்பில் நுழையவில்லை என்றும் சர்வதேச நீர்பரப்புக்கு மேலே பறந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு டிரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, தாக்குதலுக்கு விமானங்களும், கப்பல்களும் தயாரான நிலையில், டிரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாக நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் தனது முடிவை மாற்றியதால் ராணுவ தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதா? அல்லது யுக்தி மற்றும் தளவாடங்கள் தொடர்பாக நிர்வாக அக்கறைகளால் கைவிடப்பட்டதா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |