முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டில் குளறுபடி - பாக்யராஜ் அணியினர் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகர் சங்க தேர்தலில் தபால் ஓட்டில் குளறுபடி ஏற்படுத்த விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் முயற்சித்ததாக நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியை எதிர்த்து டைரக்டரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்புடன் நடைபெற்றது. மொத்தம் 1, 579 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக தேர்தலை நடத்த உதவிய காவல்துறைக்கு நன்றி. நடிகர் சங்க தேர்தலில் 1587 பேர் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகளில் நிறைய குளறுபடிகள் உள்ளன. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் பிரவீன் காந்தி குளறுபடி ஏற்படுத்த முயன்றார். 2 வாரத்திற்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகளை வங்கி லாக்கரில் வைக்க திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,100 தபால் வாக்குகளில் சுமார் ஆயிரம் பேர் வரை வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து