முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணிக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கினர். இருவரும் இணைந்து கவனமாக தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் தலா 44 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து முகமது ஹபீஸ் 20 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் பொறுப்பாக ஆடிய பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சோகைல் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தனது அரை சதத்தை பதிவு செய்த பாபர் அசாம் 69 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய இமாத் வாசிம், ஹாரிஸ் சோகைல் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இதில் இமாத் வாசிம் 23 ரன்னில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய வஹாப் ரியாஸ் 4 ரன்னில் அவுட் ஆக, தொடர்ந்து அதிரடியாக ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த ஹாரிஸ் சோகைல் 89 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் சர்ப்ராஸ் அகமது 2 ரன்னுடனும், ஷதப் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்க அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும், பெலக்வாயோ மற்றும் மார்க்ராம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து