வங்கதேசத்தில் ரயில் விபத்து: 5 பேர் பலி - 67 பேர் காயம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      உலகம்
Bangladesh Train accident 2019 06 24

டாக்கா : வங்காளதேசத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

வங்காளதேசத்தின் வடகிழக்கு பிராந்திய நகரமான சில்ஹெடில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் பராம்சல் என்ற இடத்தில் வரும் போது, திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை ஒட்டிச்சென்ற கால்வாயில் பாய்ந்தது. ஒரு பெட்டி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தையடுத்து, ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அலறினர். விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 67 பேர் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து