உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியுள்ளது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்கா ஜாம்பவான் கல்லிஸ் தெரிவித்ததாவது.,
‘‘இங்கிலாந்து அணியிடம் இருந்து உத்வேகத்தை தென்ஆப்பிரிக்கா அணி எடுத்துக் கொள்வது அவசியம். அடுத்த உலகக்கோப்பைக்காக அணியை திரும்ப கட்டமைக்க வேண்டும். நான்கு வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து தரவரிசையில் மிகவும் மோசமான இருந்தது.
அதன்பின் அணியை கட்டமைத்து மனதளவில் மாறி சிறந்த முறையில் ஒருநாள் போட்டிகளை எதிர்கொண்டனர். தற்போது அவர்கள் பயமின்றி விளையாடுகிறார்கள். அப்படி விளையாடினால் தவறுகள் ஏற்படாது. ஒட்டுமொத்த அணியையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. மோசமான நிலையில் இருந்து திரும்புவதற்கு என்ன செய் வேண்டுமோ? அதை செய்ய வேண்டும்’’ என்றார்.