முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபரை சந்திக்க தயார்: டிரம்ப்

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஒசாகா : வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப், தென்கொரியா பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க திடீரென டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்,

சீன அதிபருடனான சந்திப்பு உள்பட சில முக்கிய சந்திப்புகளுக்கு பிறகு நான் தென் கொரியா செல்ல உள்ளேன். அங்கு செல்லும் போது, வடகொரியாவின் அதிபர் இதை கவனித்தால் எல்லையில் அவரை(கிம்) நான் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து