ராஜினாமா முடிவை ராகுல் திரும்பப்பெற வலியுறுத்தி தொண்டர்கள் உண்ணாவிரதம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      இந்தியா
volunteers urged to rahul 2019 07 01

புது டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியானதையடுத்து, இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் மீண்டும் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டது.

ஆனாலும் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. ராகுல் தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தின் வாசலில் அக்கட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து