தேர்தல் சீர்திருத்தம் குறித்து பார்லி.யில் 14 கட்சிகள் நோட்டீஸ் - இன்று விவாதம் நடக்க வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Parliament-Lok Sabha 2018 12 26

புது டெல்லி : தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் ராஜ்யசபாவில் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சென்ற வாரம் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி அமைதியாக நடந்து வருகிறது. வரும் 5-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு, புதிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம், ஓட்டுச்சீட்டு முறை உள்ளிட்ட மாற்றங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், பகுஜன்சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சியினர் ராஜ்யசபா சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்று கொள்வார் என்று தெரிகிறது. இன்று அல்லது நாளை விவாதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து