முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதரை தரிசிக்க 5 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பு

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சீபுரம் : சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூர வரிசையில் காத்திருக்கின்றனர். அத்திவரதரை கடந்த 5 நாட்களாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 6-வது நாளான நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட கலெக்டர் பொன்னையா உள்ளிட்டோர் காலை 6 மணி அளவில் சாமி தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசிக்க 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் வெளியூர் வாகனங்களுடன் உள்ளூர் வாகனங்களும் அதிகரித்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

500 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் நாளொன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே இணைய தளம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி ஆனி கருடசேவை மற்றும் 15-ம் தேதி ஆடி கருட சேவையை முன்னிட்டு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மற்ற நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து